தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம்: நடிகர் கருணாஸ்!

Sasikala| Last Modified செவ்வாய், 3 ஜனவரி 2017 (17:39 IST)
திருவாடானை தொகுதியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான கருணாஸ், தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை  நடத்துவோம் என தெரிவித்துள்ளார். மேலும் அத்தொகுதி உள்பட வறட்சியால் பாதித்த அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் உரிய நிவாரண நிதியை வழங்கவேண்டும் என முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
 
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள்  துரோகம் செய்துவிட்டது. ஆனால் தற்போது ஜல்லிக்கட்டுக்காக போராடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், வருகிற பொங்கல் பண்டிகையின் போது, தடையை மீறி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் எனவும் அவர்  கூறியுள்ளார். 
 
மேலும் கட்சிப் பொறுப்பு உள்ளவர்களிடத்தில், ஆட்சி பொறுப்பையும் வழங்கவேண்டும் என்ற அதிமுக நிர்வாகிகளின்  கோரிக்கையை தானும் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :