வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 மே 2021 (13:19 IST)

நாதக, மநீம, அமமுக, தேமுதிக: எத்தனை தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது?

நாதக, மநீம, அமமுக, தேமுதிக: எத்தனை தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது?
தமிழகத்தில் அதிமுக திமுக தவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கூட்டணிகள் போட்டியிட்டன. இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி, மு க ஸ்டாலின், கமல்ஹாசன், டிடிவி தினகரன் மற்றும் சீமான் ஆகிய ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,
 
ஆனால் முடிவுகள் வெளிவந்த போது வழக்கம் போல திமுக அதிமுக கூட்டணி மட்டுமே தொகுதிகளை கைப்பற்றி வந்தன. மூன்றாவது கூட்டணி என்று தங்களைத் தாங்களே மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்த சீமான், கமல் மற்றும் தினகரன் கட்சியினர் படு தோல்வி அடைந்ததோடு கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே டெபாசிட் பெற்று உள்ளது மீதி 233 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி 178 தொகுதிகளிலும் அமமுக கட்சி 158 தொகுதிகளிலும் தேமுக போட்டியிட்ட 60 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இனியாவது தமிழகத்தில் மூன்றாவது அணி என்பது எடுபடாது என்பதை இந்த கட்சிகள் புரிந்து கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்