Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

’வெறியாட்டம் ஆடிய காவலர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை’ - மனித உரிமை ஆணையம் உறுதி

புதன், 25 ஜனவரி 2017 (18:42 IST)

Widgets Magazine

வெறியாட்டம் ஆடிய காவலர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமை ஆணையம் உறுதி அளித்துள்ளது.


 

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கினர்.

காவல் துறையினரின் திடீா் தடியடி சம்பவத்தால், சென்னையின் சில இடங்களில் அசாம்பாவிதங்கள் நடைபெற்றன. நடுக்குப்பத்தின் சில பகுதிகளில் வாகனங்கள், கடைகள் தீக்கிரையாகின.

இந்த சம்பவத்தில், காவல் துறையினரே வாகனங்களுக்கு தீவைத்தும், சேதப்படுத்தியும், பெண்களை தகாத வார்த்தையால் திட்டியதும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இது குறித்து தமிழக மாநில மனித உரிமை ஆணையம் இன்று காவல் ஆணையாளர் ஜார்ஜ் அவர்களை விசாரணை செய்தது.

அதன் பிறகு மனித பின்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவலர்கள் தாக்குதலால் பாதிப்படைந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அவ்வாறு கொடுத்தால் வெறியாட்டம் ஆடிய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பாதிப்படைந்த மாணவர்கள் தனது புகாரை கடிதம் மூலமாகவும் அனுப்பலாம்..

முகவரி:

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்,
பசுமை வழிச்சாலை,
அடையாறு
சென்னை - 600 020


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழ்நாட்டை அடுத்து போர்கொடி தூக்கும் கர்நாடகா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி நடந்த போராட்டத்தை தொடர்ந்து கர்நாடகா ...

news

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் செல்லாது? - வங்கி அதிகாரி அதிர்ச்சி தகவல்

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கும் ...

news

வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமின்

மருத்துவ சீட் மோசடி வழக்கில் வெகு நாட்களாக தேடப்பட்டு கைதுசெய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் ...

news

’நான் அப்படி சொல்லவே இல்லை’ - சைலேந்திர பாபு விளக்கம்!

தோழர் என்ற வார்த்தைக் குறித்து தான் எந்த கருத்தும் கூறவில்லை என்று தமிழ்நாடு கடலோர ...

Widgets Magazine Widgets Magazine