1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (10:58 IST)

போயஸ்கார்டன் இல்லம் எங்களுக்கே சொந்தம் - தீபக் திடீர் போர்க்கொடி

மறைந்த முதல்வர் ஜெ. வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.


 

 
இதுநாள் வரை சசிகலா தரப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், நேற்று திடீரெனெ ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்துள்ளர். மேலும், அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி தினகரனுக்கு இல்லை என அவர் அதிரடியாக பேசியுள்ளார்.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஜெ.வுடன் 33 வருட காலங்கள் ஒன்றாக இருந்ததால், சசிகலாவையும் நான் அத்தையாகவே நினைத்தேன்.  அதனால், ஜெ. மறைந்த பின் அவர் கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பிர்கு வருவதை நான் வரவேற்றேன்.
 
ஆனால், அவர் சிறைக்கு சென்ற நிலையில், கட்சியை நடத்தும் பொறுப்பு, டி.டி.வி தினகரனுகு அளிக்கப்பட்டதை என்னால் ஏற்க முடியாது. கட்சி தொண்டர்களும் அதை விரும்பவில்லை. அதிமுகவை தங்கள் குடும்ப சொத்து போல் மாற்ற அவர்கள் முயல்கின்றனர். அதை ஏற்க முடியாது.
 
கட்சியை வழிநடத்த ஓ.பி.எஸ்-ற்கு தகுதி இருக்கிறது. பேச்சு வார்த்தை நடத்தினால் அவர் மீண்டும் அதிமுகவில் இணைவார். அதிமுக பிளவு ஏற்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும். 
 
ஜெ.விற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.100 கோடியை கடன் வாங்கியாவது நான் கட்டுவேன். அதேபோல், போயஸ்கார்டன் வீடு, எங்கள் பாட்டி காலத்தில் வாங்கியது. தற்போது நானும், தீபாவும் அதன் உரிமையாளர்கள், எனவே, அங்கிருந்து மற்றவர்கள் வெளியேற வேண்டும். மக்கள் விரும்பினால், அதை நினைவு இல்லமாகவும் மாற்ற விரும்புகிறேன்” என அவ கூறியுள்ளார்.