ஜெயலலிதா சமாதியில் தீபா திடீர் தியானம்


sivalingam| Last Modified ஞாயிறு, 12 மார்ச் 2017 (21:10 IST)
சமீபத்தில் ஜெயலலிதாவின் சமாதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்  தியானம் செய்தார். அதன்பின்னர் அரசியலில் பெரிய பூகம்பமே வெடித்தது. இரண்டாக பிளந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது., இந்நிலையில் சற்று முன்னர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனருமான தீபா, ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்து வருகிறார்.


 


தொடர்ந்து 20 நிமிடங்களுக்கும் மேல் அவர் தியானம் செய்து வருவதாகவும், தியானத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து அதிரடி அறிவிப்பு ஏதேனும் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள தீபா, நாளை முதல் தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் கண்டிப்பாக தன்னை வெற்றி பெற செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :