Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீபா பேரவை; நான் கட்சி: தீபா கணவன் மாதவன்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2017 (21:57 IST)
தீபா கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்கபோவதாக அறிவித்த அவர், தீபா பேரவை தீபாவால் தனித்து இயங்க முடியவில்லை, எனவே நான் தனித்து செயல்பட முன் வந்துள்ளேன் என்றார்.
 
 


 
இன்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய தீபா கணவர் தனியாக கட்சி ஒன்று தொடங்க போவதாக அறிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
தான் புதிய கட்சி தொடங்கலாம் என்று நினைக்கிறேன். கட்சியின் பெயரை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிப்பேன். எனக்கும் தீபாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
 
தீபா, பேரவை நடத்துகிறார், நான் கட்சி நடத்துகிறேன். இரண்டும் வேறு. நான் தனித்து இயங்கப்போகிறேன். பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் நிறைய இருக்கிறது. எனவே பேரவையில் தீபாவால் தனித்து இயங்க முடியவில்லை. எனவே நான் தனித்து செயல்பட முன் வந்துள்ளேன்.


இதில் மேலும் படிக்கவும் :