தீபாவின் கணவர் புதிய கட்சி தொடங்குகிறாரா? என்னடா நடக்குது இங்கே!!!

deepa husband" width="600" />
sivalingam| Last Modified வெள்ளி, 17 மார்ச் 2017 (21:15 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அரசியல் பக்கம் எட்டி கூட பார்க்காதவர்கள் அவர் மறைந்த அடுத்த நிமிடமே முதல்வர் கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டனர். ஜெயலலிதாவுடன் ஏதாவது ஒரு வழியில் சம்பந்தம் இருந்தாலே, நான் தான் அவருடைய வாரிசு என்று வெளியே கூறிக்கொள்ளும் அவலமும் இருந்து வருகிறது.


 


ஜெயலலிதா இருந்தவரை தீபா என்பது யார் என்றே பொதுமக்களுக்கு தெரியாது. இப்போது அவர் ஒரு பேரவையை தொடங்கி முதல்வர் கனவில் மிதக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கட்சி ஆரம்பித்து ஒருசில நாட்களில் அவருக்கும் அவருடைய கணவருக்கு கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் கசிந்தது

இந்நிலையில் இந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது. தீபாவின் கட்சியில்  தீய சக்திகளின் தலையீடு உள்ளதாகவும், எனவே நான் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாகவும் தீபாவின் கணவர் மாதவன் திடீரென அறிவித்துள்ளார்.

மேலும் எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையில் உள்ள தீய சக்திகள் யார் என்பதை தகுந்த நேரம் வரும் போது அறிவிப்பேன் என்றும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்த முடிவையும் விரைவில் அறிவிப்பேன்' என்றும் சற்று முன்னர் கூறியுள்ளார்.

இந்த கூத்தையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் பொதுமக்கள் தமிழக அரசியல் என்னடா நடக்குது என்று டுவிட்டரில் கமெண்ட் போட்டு  வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :