வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 11 மார்ச் 2017 (15:21 IST)

16 வருடங்கள் போராடினால் 87 வாக்குகள் கிடைக்கும் - என்ன சொல்கிறார் தீபா?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்,  மணிப்பூர் நாட்டின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட ஐரோம் ஷர்மிளாவின் தோல்வி குறித்து, ஜெ. வின் அண்ணன் மகள் தீபா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் ஐரோம் ஷர்மிளா. அதன் பின் அவர் தனது உண்ணாவிரத்தை கைவிட்டு அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல் அமைச்சராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார். 
 
அதன்படி, மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தவ்பால் தொகுதியில் முதல் மந்திரி ஒக்ரம் ஐபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. தவ்பால் தொகுதியில் முதல் மந்திரி ஒக்ரம் இபோபி சிங் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
 
இந்த தேர்தலில் வெற்றி பெறாமல் போனாலும் இரண்டாம் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐரோம் ஷர்மிளா, வெறும் 87 வாக்குகள் மட்டும் பெற்று, டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளார். இது குறித்து கூறிய ஐரோம் ஷர்மிளா, பண பலமும் அதிகார பலமும் தன்னை வீழ்த்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், இதுபற்றி தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளா தீபா “16 வருடங்கள் மக்களுக்காக போராடினால் 87 வாக்குகள் பெறலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுதான் இந்தியாவின் ஜனநாயகம் என குறிப்பிடுவதுபடி #இந்தியஜனநாயகம் #இந்தியா போன்ற ஹேஸ்டேக்குகளை பதிவு செய்துள்ளார்.
 
இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. மக்களுக்காக போராடினால், தோல்விதான் கிடைக்கும் என சொல்ல வருகிறாரா என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருவதோடு, பலர் தீபாவை கிண்டலடித்தும் வருகின்றனர்.