Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த தீபா


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (22:01 IST)
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெ.நினைவிடத்தில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

 

 
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் வந்துள்ளார். இவர்களின் இந்த வருகை திட்டமிட்டதாக கருதப்படுகிறது. மேலும் இவர்களின் சந்திப்பு தமிழக அரசியல் சூழலில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஓ.பி.எஸ். சசிகலா எதிராக மாறிய பின் ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபா ஆதரவு அளிக்க தயராக உள்ளதாக தெரிவித்து இருந்தார். தீபா ஒ.பி.எஸ். அணியில் இணைவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
 
தற்போது இவர்களின் இந்த சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலி செலுத்திய பின் தீபா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
 
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவேன். எனது அரசியல் பிரவேசம் இன்று முதல் தொடங்கியது. இருவரின் நோக்கமும் ஒன்றாக உள்ளதால் அவருக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன், என்றார்.
 
இந்த கூட்டணியால் ஓ.பி.எஸ்.க்கு மேலும் பலம் அதிகரித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :