Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேரவை பெயரை மாற்றிய தீபா - பின்னணி என்ன?


Murugan| Last Modified சனி, 17 ஜூன் 2017 (09:42 IST)
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது வாரிசாக கருதப்பட்ட அவரின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வந்தார்.

 

 
ஆனால், அவர் அரசியல் கட்சி துவங்காமல் பேரவை ஒன்றை துவக்கினார். அதற்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என பெயர் வைத்தார். அதன் பேரிலேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார். இந்நிலையில், நேற்று திடீரெனெ தனது பேரவையின் பெயரை ஜெ. தீபா அணி என மாற்றியுள்ளார்.
 
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இரு அணிகள்  மீதும், சராமரியாக புகார் கூறிவரும் தீபா, சமீபகாலமாக நாங்கள்தான் உண்மையான அதிமுக என்ற கோஷத்தை முன்னெடுத்துள்ளார். மேலும், இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம் என 50 ஆயிரம் பிரமாணப் பாத்திரங்களையும் அவர் தேர்தல் கமிஷனிடம் சமர்பித்துள்ளார். இந்நிலையில்தான் பேரவை பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
 
தீபா பேரவை என ஒதுங்கியிருக்காமல், அதிமுக ஜெ. தீபா அணி என பெயர் மாற்றியதன் மூலம், அதிமுகவை கைப்பற்ற தீபா முயற்சிக்கிறார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :