Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எம்.ஜி.ஆரை கழட்டிவிட்டது ஏன்? தீபா திடீர் பேட்டி

சனி, 17 ஜூன் 2017 (05:07 IST)

Widgets Magazine

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பேரவை ஒன்றை ஆரம்பித்தார். அதிலிருந்து பிரிந்து அவரது கணவர் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். இந்த நிலையில் தீபா தனது பேரவையின் பெயரை தற்போது மாற்றியுள்ளார். பெரவையில் இருந்து தற்போது எம்ஜிஆர் பெயர் தூக்கப்பட்டு 'ஜெ.தீபா அணி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இந்த பெயர் மாற்றம் குறித்து தீபா விளக்கமளித்தபோது, 'பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

என் மீது திட்டமிட்டு சிலரால் அவதூறு பரப்பப்படுகிறது. அதிமுகவுக்கு உரிமை கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எங்களுக்கு திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கியுள்ளது.

அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறது. கட்சிக்கு தொண்டர்களின் பலம் அவசியம், எங்களிடம் தொண்டர்கள் பலம் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் தொண்டர்களின் பலம் எங்களிடம் தான் உள்ளது.

போயஸ் கார்டன் இல்லத்தை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தற்பொழுது அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு தீபா கூறினார்.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜனாதிபதி பதவிக்கு பொதுவேட்பாளர்: பாஜக இறங்கி வருவது ஏன்?

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலையுடன் முடிவடையவுள்ளதால் புதிய ...

news

ஸ்டாலின் முதல்வரானால் ஆண்டி கையில் கிடைத்த பானையாகிவிடும் தமிழகம்: எச்.ராஜா

தமிழகத்தை பொருத்தவரையில் பாஜகவுக்கு தற்போது பிரச்சனைகுரிய கட்சியாக இருப்பது திமுக ...

news

அதிமுகவை சுக்குநூறாக்க சசிகலா அதிரடி திட்டம்

ஒருபக்கம் அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்து இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது பெற்றுவிட ...

news

கலாயத்த ரஜினியை திடீரென சந்தித்த கஸ்தூரி

கடந்த சில மாதங்களாகவே தலைப்பு செய்தியில் இடம்பெற்று வருபவர் நடிகை கஸ்தூரிதான். எந்த ...

Widgets Magazine Widgets Magazine