பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை: சட்டென்று கோபமடைந்த தீபா!
பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை: சட்டென்று கோபமடைந்த தீபா!
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை பதிவு செய்துள்ளீர்களா என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சட்டென்று கோபமடைந்து பேசியது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பை தீபா இன்னமும் முறையாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை என தகவல்கள் வருகின்றன.
தீபா ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துபோது கூட தனது அமைப்பு பதிவு செய்யப்பட்டதற்கான பதிவு எண்ணை குறிப்பிடவில்லை. மேலும் சுயேட்சை வேட்பாளர் என்றே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தீபாவிடம் நிரூபர் ஒருவர், உங்களுடைய பேரவை இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள். உங்களிடம் பேரவை பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் வெளியிட முடியுமா என்று கேட்டார்.
இதனால் தீபா சட்டென்று கோபமடைந்து அதை உங்களிடம் நிருபிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் ஒன்றும் கோர்ட் இல்லை. அது உங்களுக்கு தேவை இல்லாதது. உங்களுடைய தனிப்பட்ட கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கூறினார்.