ராமர் கோயில் கட்டியதற்கு யாராவது ஓட்டு போடுவார்களா? தயாநிதி மாறன் கிண்டல்..!
ராமர் கோவில் கட்டியதற்கெல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் முட்டாள்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
மதுரையில் நடந்த தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவில் பேசிய தயாநிதிமாறன் தமிழ்நாட்டு மக்கள் மாபெரும் புரட்சியை செய்தனர் என்றும் பத்தாண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்து திமுகவை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் நான்காவது வளர்ச்சி அடைந்த நகரமாக மதுரை உள்ளது என்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் ரூ18 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்
மோடி தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர் மீது பாசம் இருப்பது போல் நடிக்கிறார் என்றும் இதே போல் தான் கேரளா, கர்நாடகா சென்றாலும் கூறுவார், கோழி கூவுவது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது மொழியில் பேசி வாக்குகளை களவாட பார்க்கிறார் என்றும் தெரிவித்தார்
பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டியதற்கெல்லாம் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் தான் முட்டாள்கள் என்று தயாநிதி மாறன் பேசியுள்ளார்
Edited by Siva