திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2023 (07:51 IST)

இந்தி பேசுபவர்கள் கழிவறை சுத்தம் செய்யும் வேலை பார்க்கிறார்கள்.. தயாநிதியின் பழைய வீடியோ வைரல்..!

இந்தி பேசும் மக்கள் தமிழகத்திற்கு வந்து கழிவறை சுத்தம் செய்யும் வேலை பார்க்கிறார்கள் என்றும் ஆனால் ஆங்கிலம் கற்றதால் தமிழர்கள் மரியாதைக்குரிய வேலையை பார்த்து வருகிறார்கள் என்றும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தயாநிதி மாறன் பேசிய  வீடியோ இப்போது திடீரென வைரலாகி வருகிறது.  

திமுக எம் பி தயாநிதி மாறன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தி மட்டுமே படித்த உத்தரப்பிரதேசம் பீகார் மக்கள் தமிழகத்திற்கு வந்து கழிவறை சுத்தம் செய்யும் வேலை உள்பட சில வேலைகளை செய்கிறார்கள்.

ஆனால்  தாய் மொழியுடன் ஆங்கிலம் கற்றதால் தமிழர்கள் மரியாதைக்குரிய சம்பளத்துடன் வேலை செய்கிறார்கள் என்று பேசினார். இந்த பழைய வீடியோ திடீரென சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த பீகார் உத்தர பிரதேச மக்களை இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva