சட்டமன்ற தேர்தல் : திமுக சார்பில் போட்டியிடுபர்களுக்கு தேதி அறிவிப்பு


Murugan| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (15:35 IST)
வருகிற சட்டமன்ற தேர்தலில் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு, ஜனவரி 24 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 
இதுகுறித்து திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பு மனுக்கள் வருகிற 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும்.
 
பொதுத்தொகுதி வேட்பாளருக்கு ரூ. 25 ஆயிரமும், தனி தொகுதிகள் மற்றும் பெண்களுக்கு ரூ. 15 ஆயிரமும் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
 
போட்டியிட விண்ணப்பித்தவர்களின் தொகுதிகள் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், அவர்களது விண்ணப்பக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். மேலும் விண்ணப்பங்களை ரூ. 1000 வீதம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் ” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :