செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (20:29 IST)

சிலிண்டர் விலை உயர்வு ! - இல்லத்தரசிகள் அதிருப்தி

சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இதுகுறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை அடுத்து டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சற்றுமுன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

அந்த உரையில் அவர், தடைக்கற்களைத் தாண்டிச் செல்லும் மிகப்பெரிய திட்டம் ஒன்று வரப்போகிறது எனக் கூறினார்.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானிய சிலிண்டரின் விலை மேலும் ரூ. 25 அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் சிலிண்டரில் விலை உயர்ந்ததை அடுத்து, இன்று மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது விலை ரூ.852 லிருந்து ரூ.877 ஆக அதிகரித்துள்ளது.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இணையதளத்தில் இதுகுறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.  மேலும் ஒரு பக்கம் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு மற்றொருபக்கம் சிலிண்டர் விலை உயர்வு மக்களின் பட்ஜெட்டை பதம் பார்ப்பதாக உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.