நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு புயலாக உருவாகுமா?
நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக்குமா என்பது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசு அவர்கள் பதில் அளித்துள்ளார்
தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்
இந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்றும் இதனால் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் நாளை உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என்பது போகப்போகத்தான் தெரியும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்