ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: ஞாயிறு, 29 மே 2016 (17:59 IST)

மாஜி அமைச்சரை உசுப்பேற்றிய சிட்டிங் அமைச்சர்

கரூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ வும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் 441 வாக்குககள் வித்யாசத்தில் வெற்றி பெற்று, களம் கண்டார். 


 

 
இந்நிலையில் இதற்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான (கரூர் தொகுதியை பொறுத்தவரை) செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் அருகே உள்ள இராமேஷ்வரப்பட்டி பகுதியில் அவரது வீட்டிற்கருகில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதியம்மன் கோயிலில் சுமார் 1 மணி நேரமாக சாமி கும்பிட்டது, அவர் தான் அந்த துறையை சார்ந்த அமைச்சர் என்றும், அந்த தொகுதியை சார்ந்த எம்.எல்.ஏ என்பதை சுட்டிக்காட்டியவிதத்தில் அமைந்திருப்பதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்க, தமிழகத்தில் கோஷ்டி பூசல் இல்லாத ஒரே கட்சி அ.தி.மு.க மட்டும், தான் இந்த அ.தி.மு.க கட்சியில் கரூரை பொறுத்தவரை இந்த மாதிரி கோஷ்டி பூசல் ஏற்படுத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரே முன்னுதாரமாக இருக்க கூடாது என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
மேலும் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் எப்போது வரும் என்பது அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட ஏராளமான கட்சிகளின் வேண்டுகோளாக இருக்கும் பட்சத்தில் அரவக்குறிச்சியின் அ.தி.மு.க வேட்பாளரான செந்தில் பாலாஜிக்கு இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் நின்று விட்டதை நினைப்பூட்டும் விதமாக அமையும் என்பதும்,. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் கருத்தாகும். 
 
மேலும் இதே நிலை நீடித்தால் அ.தி.மு.க அமைச்சர் ஆன இவரே இவருக்கு எதிராக அ.தி.மு.க விற்கு எதிராக களம் காணுவாரா என்று சந்தேகம் தற்போதே ஏற்பட்டுள்ளதாக கட்சியினர் மட்டுமில்லாமல் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.