நிம்மதி பெருமூச்சு விட்ட காஷ்மீர் மக்கள்!
கடந்த ஜூலை 9-ம் தேதி காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி உள்ளிட்ட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அன்று முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களில் 82 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைதி நிலை திரும்பியதால், அங்கு அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு, திரும்பப் பெறப்பட்டது.
இதை அடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள நகரங்களில் மக்கள் போக்குவரத்து அதிகரித்தது. எனினும், ஸ்ரீநகரில் சற்று பதற்றம் நீடிப்பதால், அங்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.