திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (10:43 IST)

அயனாவர சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் 17 பேர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது!

சென்னை அயனாவரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் வன்புணர்வு செய்த 17 கயவர்கள் மீது குண்டர் சட்டம் போட காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் அந்த அபாட்மெண்டின் செக்யூடிட்டி, எலக்ட்ரீஷியன் என 17 அயோக்கியர்கள் சிறுமியை பல மாதங்களாக சீரழித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதாகிய 17 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் அந்த 17 அயோக்கியர்கள் மீதும் குண்டர் சட்டம் போட காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.