டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கடலூரில் பரபரப்பு

Last Modified ஞாயிறு, 10 ஜூன் 2018 (20:26 IST)
கடலூரில் டாஸ்மாக் கடை ஒன்றின் மீது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இந்த கைதை
கண்டித்து
கடலூர் அருகே உள்ள கம்மியம்பேட்டை டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் மதுபாட்டில்களை உடைத்து அவரது கட்சியினர் சேதப்படுத்தினர். இதுகுறித்து 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இன்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அதே டாஸ்மாக் கடையை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வருவதை கண்ட கடை ஊழியர்கள்
உடனடியாக கடையின் ஷட்டரை மூடியதால் அவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் டாஸ்மாக் கடையின் அருகில் இருந்த வைக்கோல் குடோன் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :