1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:03 IST)

’ரஜினி அரசியல்’ குறித்த விமர்சன காட்சிகள்... தயாரிப்பாளர் அதிரடி முடிவு !

ஜெயம்ரவி நடித்துள்ள 'கோமாளி' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த டிரைலரில் ரஜினியை கிண்டல் செய்வது போல் ஒரு காட்சி இருப்பதை கமல் கண்டித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் கோமாளி படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக கோமாளி பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்  தெரிவித்துள்ளார்.
'கோமாளி' படத்தின் டிரெய்லரில் கடந்த 20 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலில் வருவதாக கூறி ஏமாற்றிக் கொண்டிருப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், கமல்ஹாசன் கோமாளி படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார்
 
இந்த ட்ரைலரை பார்த்த கமலஹாசன் அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்க்கு போன் செய்து தனது அதிருப்தியை தெரிவித்ததாக மக்கள் நீதி மையத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 'நம்மவர் இன்று காலை கோமாளி டிரெய்லரை பார்த்தார். அதில் ரஜினி அரசியலுக்கு அதைப் பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடாக? நியாயத்தின் குரலா? என்று அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்
 
ரஜினி கமல் ஆகிய இருவருக்கும் 'கோமாளி' படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நெருக்கமானவர் என்பதால் கமல்ஹாசனின் கண்டனத்தை அடுத்து இந்த காட்சியை படத்திலிருந்து நீக்க ஐசரி கணேஷ் கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
 
இந்நிலையில் இன்று  தனியார் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியில்:  ரஜினி சம்பந்தமான காட்சியை பார்த்த பின்னர் கமல் அவது அதிருப்தியை தெரிவித்தார்.
 
அவரது கூற்றுப்படி காட்சியானது எண்ணத்தை உருவாக்குவதாக இருந்தால், அக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிடுகிறேன். மேலும் ரசிகர்களும் அக்காட்சியை நீக்கும் படி கூறுகிறார்கள், அவர்கள் கோரிக்கையை ஏற்று அந்தக் காட்சிகளை நீக்கிவிடுகிறோம். ரஜினியின்  ரசிகர்களில் நானும் ஒருவன் அவரது பெயருக்கும் புகழுக்கும் இழுக்கு வருவதை தாங்கிக்கொள்ள மாட்டேன். அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் இப்படத்தில் காட்சிகளை வைத்தோம். ஆனால் தற்போது வரும் அதிருப்தியால் அக்காட்சிகளை நீக்க முடிவு செய்திருக்கிறோம்.இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் பிரதீப், நடிகர் ஜெயம்ரவி ஆகியோரிடமும் கலந்து பேசி விட்டதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து சமூகவலைதளத்தில் ரஜினி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளுகு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.