வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2016 (15:53 IST)

பொது இடங்களில் ‘ஜல்சா’ செய்த வார்னே - புகைப்படங்களால் சர்ச்சை

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தனது ஆட்டகாலம் வரையிலும், தவிர்க்க முடியாத, அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே. 1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிரான ஆஷஸ் தொடரின்போது ஷேன் வார்னே மைக் கேட்டிங்கை வீழ்த்திய பந்துதான் கடந்த நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சு என்று விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.
 
ஷேன் வார்னே கிரிக்கெட்டில் மட்டும் அல்ல; ஆடுகளத்திற்கு வெளியேயும் பல சர்ச்சைகளில் சிக்குபவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட வார்னேவின் பெயர் தற்போதும் உலா வந்துகொண்டு தான் இருக்கின்றன.
 

 
இந்நிலையில், லண்டனின் ஒரு இரவு விடுதிக்கு வெளியே ஒரு பெண்ணை அவர் முத்தமிடுவது போன்றும், இருவரும் சிகெரெட் பரிமாறிக் கொள்வது போன்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது அவரது ’புதிய காதலி’ என்று கூறப்படுகிறது.
 
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேன் வார்னே, ”நான் விளக்கம் அளிக்கவும் மாட்டேன், குற்றம் சாட்டவும் மாட்டேன். நான் மிகவும் தனிமையிலே இருக்கிறேன், நான் யாரையும் பார்க்கவில்லை. தயவு செய்து உண்மைகள் நேரடியாக கேளுங்கள் நிரூபர்களே” என்று கூறியுள்ளார்.