Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படாது


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 8 ஜனவரி 2017 (17:01 IST)
இன்று நள்ளிரவு முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், பெட்ரோல் பங்குகளில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

 
டிஜிட்டல் பரிவர்த்தனையால் வங்கிகள் 1% சேவை கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை. வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து சேவை வரியை வங்கிகளுகு பெட்ரோல் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசு மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற ஊக்குவித்து வரும் நிலையில் நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை எதிர்த்து அறிவிப்பு வெளியிட்டு இருப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ரொக்க பணம் மற்றும் ஏற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :