வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (16:36 IST)

மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்த சம்பவம்: மாட்டின் உரிமையாளர் கைது..!

சென்னை அரும்பாக்கத்தில் இன்று பள்ளிச் சிறுமி பள்ளி முடிந்து விட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் திடீரென மாடு முட்டியதால் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து இது குறித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதனை அடுத்து சென்னை தெருக்களில் மாடுகளை மேயவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும்  சென்னை மாநகர ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
இந்த நிலையில்  சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார் . மேலும் தெருக்களை நம்பி மாடு வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படுகாயம் அடைந்த சிறுமிக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva