வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (09:01 IST)

கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி துவங்கியது

சென்னையில் 2 நாட்களுக்கு பின்னர் இன்று முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் பொது இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு பின்னர் இன்று முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. வேலை மற்றும் உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசியில் முன்னூரிமை அளிக்கப்படுகிறது. கையிரப்பில் 9,000 கோவிஷீல்டு இருக்கும் நிலையில் காலை 9 மணி முதல் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.