செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (13:26 IST)

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு

கோச்சடையான் படத்திற்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பி 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 
நடிகர் ரஜினியை வைத்து அவரது மகள் சவுந்தர்யா ரஜினி உருவாக்கிய கோச்சடையான் படத்திற்கு ஆட் பீரோ நிறுவனம் ரூ.10 கோடி ஃபைனான்ஸ் செய்ததாக தெரிகிறது. ஆனால், அதில் ரூ.8.5 கோடியை இதுவரை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்தவில்லை எனத் தெரிகிறது. 
 
எனவே, இது தொடர்பாக அந்த நிறுவனம் 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆட் பீரோ நிறுவனத்துக்கு எதற்காக பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறீர்கள் என்று லதா ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இன்று பிற்பகல் 12.30 மணிக்கு, எப்போது பணத்தை திருப்பிச் செலுத்துவீர்கள் என்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதன் பின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லதா ரஜினிகாந்த் கொடுக்க வேண்டிய பணத்தை இன்னும் 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.