1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (11:38 IST)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதற்கு தடை: பால் கலப்படம் வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதற்கு தடை: பால் கலப்படம் வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக குண்டை தூக்கி போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் பாலாஜி. ஆனால் அவர் அதனை நிரூபிக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களை விமர்சித்துதான் வருகிறார்.


 
 
கடந்த மே 24-ஆம் தேதி பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றனர். தனியார் பால் நிறுவனங்களின் பாலை குடித்தால் புற்று நோய் வரும் என பீதியை கிளப்பினார்.
 
இதன் பின்னர் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. தனியார் பால் நிறுவனங்கள் கொதித்தெழுந்தது. இறுதியில் பாலில் கலப்படம் இல்லை என சோதனையில் தெரிய வந்தது. இருந்தாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது குற்றச்சாட்டை நிறுத்தியபாடில்லை. தொடர்ந்து பால் நிறுவனங்களை குற்றம் சாட்டியே வந்தார்.
 
இதனால் மூன்று பால் நிறுவனங்கள் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உரிய ஆதாரம் இல்லாமல் பால் கலப்படம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதற்கு தடை விதித்துள்ளது.
 
ஹட்சன், விஜய், டோக்லா உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்த இந்த வழக்கில் 4 வாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்.