1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (14:06 IST)

நெல்லை கண்ணனுக்கு நீதிமன்ற காவல் : நீதிபதி அதிரடி உத்தரவு !

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல காவல்துறை அலுவலகங்களில் புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டுமென தமிழக பாஜக சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. அதையடுத்து நேற்று இரவு 9 மணியளவில் பெரம்பலூரில் வைத்து போலிஸார் கைது செய்தனர்.

இதையடுத்து அவரது கைதை கொண்டாடும் விதமாக ஹெச் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ஆப்ரேஷன் சக்ஸஸ்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த கைதுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 
 நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நெல்லைக் கண்ணனை வரும் 13 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.