1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (14:53 IST)

இதை செய்யாவிட்டால் மதுவிற்பனை தடை செய்யப்படும்: நீதிமன்றம் எச்சரிக்கை!

court
பள்ளி மாணவ மாணவர்கள் மது குடிப்பதை தடுத்து நிறுத்தாவிட்டால் மது விற்பனையை தடை செய்ய நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பாக வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.