ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (15:38 IST)

போலீஸ் போட்ட கணக்கு - தவிடு பொடியாக்கிய நீதிமன்றம்

கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்து கடந்த 16ஆம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் 23ம் தேதி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் கருணாஸை விசாரணை செய்ய 7 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தனக்கு ஜாமீன் வேண்டும் என கருணாஸ் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வரவிருந்ததால் கருணாஸ் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
இந்நிலையில், கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுக்க மறுத்து, போலீசார் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. 
 
கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை அவரது தரப்பு வழக்கறிஞர் வாதடியதை அடுத்து இந்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். இதனால், கருணாஸ் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
 
மேலும், போலீசார் தரப்புக்கு இந்த விவகாரம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.