திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:14 IST)

இனி இதுபோல் பேச மாட்டேன் என பிரமாண பத்திரம்: கனல் கண்ணனுக்கு ஜாமின் நிபந்தனை!

kanal
இனிமேல் இதுபோல் பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
 
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக குற்றம் சாட்டப் பட்டது. இதனையடுத்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் கணல் கண்ணன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இனிமேல் இதுபோன்று பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது