கபடி ஆடிய கொரோனா நோயாளிகள் ... வைரலாகும் வீடியோ
தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.
வரும் ஜூலை 30 வரை தமிழகத்தில் 5 மாவடங்களில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இன்றிலிருந்து சென்னையில் ஊரங்டகில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சாலையில் வாகனங்கள் அதிகளவில் சென்றதையும், கடைகளில் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், இன்று சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி விடுதி மொட்டை மாடியில் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் கபடி ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.