திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (21:03 IST)

தமிழகத்திற்கு வந்தது கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள்!

தமிழக மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே 
 
ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை அனுப்பவில்லை என்றும் அதனால் அவ்வப்போது தடுப்பூசி மையங்கள் நிறுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு வந்த ஆறு லட்சம் தடுப்பூசிகள் தற்போது காலியாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தமிழகத்துக்கு இன்று கோவிஷீல்டு 6,01,630 டோஸ்களும் , கோவாக்ஸின் 91,580 டோஸ் தடுப்பூசிகளும் வந்தடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.