1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (08:03 IST)

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றி அமைப்பு: தமிழக அரசின் உத்தரவு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளிடம் இருந்து பெறும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது
 
இந்த நிலையில் தற்போது அந்த கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தி தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி தீவிரம் இல்லாத, ஆக்சிஜன் இல்லாத படுக்கைக்கான ஒரு நாள் கட்டணம் ரூ.3000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல் தீவிரம் இல்லாத, ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைக்கான கட்டணம் ரூ.7000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.