திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (19:15 IST)

தமிழகத்தில் இன்று 5,692 பேருக்கு கொரோனா உறுதி ! 66 பேர் பலி !

தமிழகத்தில் இன்று மேலும் 5,692   பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,63,691  ஆக அதிகரித்துள்ளது.
 

இன்று  5,470 பேர் குணமடைந்தனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக  5,08,210 
ஆக அதிகரித்துள்ளது.

 
இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 9,076  பேர் உயிரிழந்துள்ளனர்.

 
இன்று மட்டும் 90,607 பேருக்கு கொரொனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை  68,15,644 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 
இன்று சென்னையில் மட்டும் 1,089  பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர்..

தமிழகத்தில் கொரொனா இறப்பு விகிதம் 1.2 % ஆக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது : இறப்புவிகிதத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இங்கு குணமடைவோர் விகிதம் 90% உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கர் விளக்கம் மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு 6 மாதங்களில் ரூ.831 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்