1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (12:20 IST)

புதுச்சேரியில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,25,517 ஆக உயர்ந்திருக்கிறது. புதுச்சேரியில் இதுவரை 1,22,818 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் பலியானார். தற்போது 867 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.