புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (08:33 IST)

குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் ஓராண்டு ஜெயில் - போலீசார் எச்சரிக்கை

குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் ஓராண்டு ஜெயில் வழங்கப்படும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி  பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் குழந்தை கடத்த வந்தவர் என கருதி மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.