வீடு வீடாக குக்கர் வழங்கியது யார்? பறக்கும் படை வந்ததும் தெறித்து ஓட்டம்..!
தமிழகத்தில் தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அண்டை மாநிலமான புதுவையிலும் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சில பகுதிகளில் வீடு வீடாக சென்று நள்ளிரவில் குக்கர் வழங்கியதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் அப்போது பறக்கும் படையினர் வந்ததும் அவர்கள் தெறித்து ஓடியதாகவும் கூறப்படுகிறது.
புதுவையில் உள்ள ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதியில் புதுவை முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் திமுக அவருக்கு ஆதரவு அளித்துள்ளது என்பது தெரிந்தது . பாஜக சார்பில் நமச்சிவாயம் போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் தமிழ் வேந்தன் போட்டியிடுகின்றனர்
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென ஒரு குறிப்பிட்ட கட்சியினர் புதுவையில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் லாரியில் குக்கரை எடுத்து வந்து வீடு வீடாக வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து பறக்கும் படையினருக்கு தகவல் அனுப்ப சம்பவம் இடத்திற்கு பறக்கும் படையினர் ஒரு சில நிமிடங்களில் வந்து விட்டனர்
இதனை அடுத்து குக்கரோடு உள்ள லாரியுடன் தப்பித்து சென்று விட்டதாகவும் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் புதுவையில் பொதுமக்களுக்கு குக்கர் பரிசுகளை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva