1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (10:45 IST)

தாறுமாறாக உயரம் தங்கம் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி...!

Gold
சமீப காலமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வரும் நிலையில் இன்றும் உயர்வை சந்தித்துள்ளது.


 
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.80.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி (கட்டி வெள்ளி)  ரூ.80 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆகிறது.