செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (16:40 IST)

பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக திமுக? தலைவராக போகும் முக்கிய புள்ளி

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மக்களவையில் எதிர்கட்சியாக இருப்பதற்கு குறைந்த பட்சமாக ஒரு கட்சி 54 எம்.பிக்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸுக்கு கிடைத்ததோ 52 சீட்டுகள்தான்.

விதிமுறைகளின்படி இரண்டாவது அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் அதன் தலைவர் ராகுல் காந்தி எதிர்கட்சி தலைவராக வாய்ப்பு உள்ளது. ஆனால் மக்களவைக்கு செல்வதை விட மக்களிடம் செல்வது முக்கியம் என ராகுல் கருதுகிறார் என்றும், அடுத்த தேர்தலுக்குல் காங்கிரஸை தலைநிமிர்த்த வேண்டிய முக்கிய கடமை அவருக்கு இருப்பதால் தனது கூட்டணி கட்சிகளில் உள்ள ஒருவரை எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க செய்யலாம் என்றும் அவர் விரும்புவதாக தெரிகிறது.

அப்படி கூட்டணி கட்சிகளில் உள்ள ஒருவரை எதிர்கட்சி தலைவராக அமர வைத்தாலும் அவருக்கு மக்களவை கூட்டத்தில் நல்ல அனுபவமும், அறிவும் இருக்க வேண்டும் என்பது அவசியம். காங்கிரஸுக்கு கூட்டணி அளவில் மிகவும் பக்கத்துணையாக நின்றது கேரளாவும், தமிழ்நாடும்தான். முக்கியமாக முதன்முதலாக ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததே முக ஸ்டாலின்தான் என்பதால் திமுக எம்.பி ஒருவருக்குதான் எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அப்படி திமுகவில் ஒருவர் எதிர்கட்சி தலைவர் ஆக முடியுமென்றால் அது யார்? என்பது பற்றி ஒரு சின்ன கணிப்பு

திமுகவின் முக்கிய எம்.பிக்களில் முதலாவதாக இருப்பவர் டி.ஆர் பாலு. 2004 மக்களவையில் எம்.பியாக மட்டும் இல்லாமல் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராக பதவி வகித்தவர். மக்களவை கூட்டங்கள், நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்த முடிவுகள் எடுப்பது போன்றவற்றில் போதிய அனுபவமுள்ளதால் டி.ஆர் பாலு எதிர்கட்சி தலைவராக பதவி ஏற்கலாம்.

இரண்டாவது சன் குழும தலைவர் தயாநிதி மாறன். தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சராய் இருந்திருக்கிறார் என்றாலும் இவர்மீதும் இவருக்கு அடுத்து அந்த துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற ஆ ராசாவின் மீதும் பல புகார்களும், மக்களின் மத்தியில் எதிர்மறை கருத்துகளும் இருப்பதால் வாய்ப்பு மிகவும் குறைவே.

இவர்களை தவிர இன்னும் சிலர் பட்டியலில் இருந்தாலும் காங்கிரஸுக்கு கேரளா என்று இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. ராகுலை வெற்றிபெற செய்த மாநிலம் என்பதாலும், காங்கிரஸுக்கு நேரடி மக்கள் செல்வாக்கு உள்ள மாநிலம் என்பதாலும் கேரள காங்கிரஸ் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.