திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2024 (07:07 IST)

சாம்சங் தொழிலாளர்கள் ஸ்டிரைக் முடிந்ததா? தொடர்கிறதா? குழப்பமான தகவல்கள்..!

Samsung
கடந்த சில நாட்களாக சாம்சங் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்ததாகவும் ஒரு தரப்பின் செய்தி வெளிவந்துள்ளது.

அதேசமயம், மற்றொரு தரப்பு, நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல், போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது என தெரிவித்து, இந்த நிலைபாடு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25 நாட்களாக காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராடி வந்த நிலையில், அரசு தலையீடு செய்ததாகவும், சமரச முடிவு எட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் குழு மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள், போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பும் உடன்பாடு எட்டியதாகவும், இதன் பின்னர் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், சாம்சங் இந்தியா  சிஐடியூ தலைவர் முத்துக்குமார் அவர்கள், “சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது; அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை” என்று தெரிவித்தார். மேலும், "உடன்பாடு எட்டப்பட்டதாக வெளியாகும் செய்தி தவறானது" என்றும், "சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது மற்றும் திசைதிருப்பும் செயல்" என்றும் அவர் குறிப்பிட்டார்.


Edited by Siva