வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (17:25 IST)

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மேல் தேர்தல் ஆணையத்தில் புகார்! ஏன் தெரியுமா?

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 11 ஆவது முறையாக போட்டியிடுகிறார். இதுவரை அவர் 1 முறை மட்டுமே அங்கு தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் மே 2 ஆம் தேதி வாக்குச்சாவடி மையத்தில் அவரும் அவர் மகன் கதிர் ஆனந்தும் சேர்ந்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் துரைமுருகன் தோல்வி அடைவது உறுதி என்பதால் இதுபோல கலவரத்தை உண்டுபண்ணி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முயற்சி செய்வதாகவும் சொல்லப்பட்டுள்ளது.