வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (18:56 IST)

விபத்தில் பலியாவோருக்கு உரிய இழப்பீடு! நீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு சீரான இழப்பீடுகள் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

சாலையில் செல்லுகையில் மரம் விழுந்து  இருவேறு விபத்துகளில் பலியான முதியவர் மற்றும் சிறுவனின் குடும்பத்தின் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்,சுப்பிரமணியன்  ஒரு சில நிகழ்வுகளில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுகிறது. ஒரு சில நிகழ்வுகளில் 1 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது என தெரிவித்தனர். மேலும், பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீட்டு தீர்மானிக்க 8 வாரங்களில் உரிய விதிகள் வகுக்க வேண்டுமென தமிழக அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.