Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மெரினாவில் 144 தடை உத்தரவு வாபஸ்


Abimukatheesh| Last Updated: சனி, 4 பிப்ரவரி 2017 (20:41 IST)
சென்னை மெரினாவில் கடந்த மாதம் 29ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது என ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

 
 
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போரட்டத்தை அடுத்து திடீரென்று சென்னை மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் 29ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த 144 தடை உத்தரவு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது 7 நாட்களில் திடீரென்று மெரினவில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறியதாவது:-
 
'கடந்த சில நாட்களாக நிலைமை கட்டுக்குள் இருப்பதால், இன்று மெரினா கடற்கரையில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. சென்னை மாநகர காவல் சட்டப்படி  41-ன் கீழ் மெரினா கடற்கரையில் கூடுவது தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் தொடரும், என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :