1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (15:36 IST)

மெட்ரோ ரயில்களுக்கு இனி ஆன்லைன் டிக்கெட்! – செல்போன் செயலி அறிமுகம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க டிஜிட்டல் முறையில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகளை ஈர்க்க பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகிறது மெட்ரோ நிர்வாகம். விடுமுறை நாட்களில் மெட்ரோவில் பயணிக்க 50 சதவீத கழிவு வழங்கப்பட்டுள்ளது பயணிகளை ஈர்த்துள்ளது.

தொடர்ந்து பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வசதியை மெட்ரோ அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கான மொபைல் அப்ளிகேஷன் ஜனவரி மாதம் மெட்ரோ நிர்வாகம் வெளியிட உள்ளது.

இந்த அப்ளிகேஷன் மூலம் எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும் என்பதை தேர்வு செய்து பணம் செலுத்தினால் இ-டிக்கெட் கிடைக்கும். அதை கொண்டு பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளின் கிரெடிட், டெபிட் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளையும் கட்டணம் செலுத்த பயன்படுத்தும் வகையில் அப்ளிகேசன் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

வட மாநிலங்களில் டெல்லி, மும்பை பகுதிகளில் பல ரயில் நிலையங்களில் இதுபோன்ற மொபைல் அப்ளிகேசன் சேவை பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.