வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (15:36 IST)

முடியும் ஊரடங்கு: கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது?

ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

 
தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க துவங்குய போதே பொதுமுடக்கத்திற்கு முன்பாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுரை அளிக்கப்பட்டது. தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மட்டும் வெளியாகியுள்ளது. 
 
பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் அடுத்து கல்லூரிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளதாவது, 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கும் என அறிவித்துள்ளார். 
 
ஏற்கனவே, கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் நிறுத்தப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே சுழற்சி முறையில் காலை முதல் மதியம் வரை கல்லூரிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.