வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (19:21 IST)

தோழிகளுடன் பப்புக்கு சென்ற கல்லூரி மாணவர். நடனமாடியபோது நேர்ந்த பரிதாபம்..!

தோழிகளுடன் பப்புக்கு சென்ற கல்லூரி மாணவர் நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சுகைல் என்பவர் சென்னையில் உள்ள கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு பெண் தோழிகளுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்புக்கு வந்த நிலையில் அங்கு அவர் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாகவும் சுய நினைவின்றி இருந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் போல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக டாக்டர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva