மாணவர்களையே கத்தியால் குத்திய கல்லூரி முதல்வர்!


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 12 ஜனவரி 2017 (17:25 IST)
இரண்டு மாணவர்களை கல்லூரி முதல்வர் கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு கல்வியியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை கல்லூரி வளாகத்தில் கொண்டாடுவதற்கு அனுமதி கேட்பதற்காக மாணவர் தலைவர் ஜெகன் மற்றும் சில மாணவர்கள் கல்லூரி முதல்வர் பார்த்திபன் அறைக்குள் சென்றனர்.

ஏற்கனவே தமக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது கோபத்தில் இருந்த பார்த்திபன், இரு மாணவர்களை கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த மாணவர்கள் ஜெகன் மற்றும் ராஜன் ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்லூரி முதல்வர் பாத்திபன் தலைமறைவாகி உள்ளார். மாணவர்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பதாகவும், மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டி மாணவர்கள் பார்த்திபனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :