துணிப்பை கொண்டு வந்தால் தள்ளுபடி..! – நடைபாதை வியாபாரிகள் அசத்தல் முயற்சி!
கோவையில் துணிப்பை கொண்டு வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கினால் தள்ளுபடி என நடைபாதை வியாபாரிகள் அறிவித்துள்ளதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பையின் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிறுத்தி மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கோவையில் நடைபாதை வியாபாரிகள் சிலர் துணிப்பை கொண்டு வந்து காய்கறி, பழங்கள் வாங்குபவர்களுக்கு விலையில் ரூ.5 தள்ளுபடி என அறிவித்துள்ளனர். இதனால் மக்கள் பலரும் துணிப்பை கொண்டு வந்து காய்கறி, பழங்கள் வாங்கி செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடைபாதை வியாபாரிகளின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.